மேலும் செய்திகள்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 'தமிழ் கனவு' நிகழ்ச்சி
22-Aug-2025
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டி தனியார் பொறியியல் கல்லுாரியில், 'தமிழ் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை' நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சதீஷ் தலைமையில் நடந்தது. கல்லுாரி கல்வி இயக்க மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, டி.ஆர்.ஓ., கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் தணிக்கைவேலன் வரவேற்றார். விழாவில் சொற்பொழிவாளர் ஆறுமுகத்தமிழன் பேசினார்.தொடர்ந்து கலெக்டர் சதீஷ் பேசுகையில், ''தமிழ் கனவு நிகழ்ச்சி மூலம் தமிழ், மொழி, பண்பாடு, கலாசாரம், தமிழ் மரபு உள்ளிட்ட தொன்மை, பழமை குறித்து அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கு தேவையான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை மாணவர்கள் நன்கு படித்து பயன்பெற வேண்டும். தமிழனின் வீரம், கொடை, அறிவு, துணிவு எனும் பண்பாட்டு பெருமிதங்களை சர்வதேச இலக்கியங்களோடு, அறிஞர்களின் கூற்றுகளோடு ஒப்பிட்டு, மாணவர்களாகிய நீங்கள் அனைவரும், தமிழ் பண்பாட்டுக்காக பெருமை சேர்க்க, தினமும் நேரம் ஒதுக்கி தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும்,'' என்றார். பின் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு உயர்கல்வி மற்றும் தொழில்களுக்கான வங்கி கடன்கள் சுயதொழில் தொடங்குதல் போன்ற பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். விழாவில், தமிழ் பெருமிதம் குறித்து கேள்வி எழுப்பி, 5 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது. அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை உள்ளிட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
22-Aug-2025