பாரா நீச்சல் போட்டி வெற்றியாளர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
தர்மபுரி, சென்னை, வேளச்சேரியில் கடந்த, 25 அன்று, 6வது இளையோர் மற்றும் மூத்தோருக்கான மாநில அளவிலான பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதில், தர்மபுரியை சேர்ந்த, வெங்கடேசன், விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர், 7 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்றனர். மூவரும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதை அடுத்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீசை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில், டி.ஆர்.ஓ., கவிதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.