உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூட்டுறவு ஊழியர் கூட்டமைப்பு அவசர செயற்குழு கூட்டம்

கூட்டுறவு ஊழியர் கூட்டமைப்பு அவசர செயற்குழு கூட்டம்

தர்மபுரி :தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின், தர்மபுரி மாவட்ட கிளை அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தெய்வம் தலைமையில் நேற்று நடந்தது.மாநில துணை பொதுச் செயலாளர் அம்மாசி, மாநில இணை செயலாளர் வள்ளியப்பன் ஆகியோர் பேசினார். தீபாவளி பண்டிகைக்கு உறுப்பினர்களுக்கு பங்கு ஈவு தொகை வழங்க, 2024--25 ஆண்டின் தணிக்கையை விரைந்து முடித்து கொடுக்க வேண்டும். பணியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதற்கு ஏதுவாக, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி காசு கடன் திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். 20 கோடி ரூபாய்க்கு மேல், கடன் நிலுவை உள்ள பணியாளர் சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் பணியிடத்தை உருவாக்க கூட்டுறவுத்துறை அலுவலர்கள் முயல்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு, பணியிடம் உருவாக்கி ஊதியம் வழங்கினால், சங்கங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நலிவடையும் நிலைக்கு தள்ளப்படும். எனவே, மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்க முயல்வதை கண்டிப்பது, உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை