| ADDED : செப் 06, 2011 12:01 AM
தர்மபுரி: அரூர் அருகே, அரசு ஆதிதிராவிடர் விடுதியில் நடந்த தணிக்கையின் போது, மாணவர்களுக்கு வழங்கும் உணவு மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், விடுதி காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.அரூர் தாலுகா, தீர்தமலை அரசு ஆதிதிராவிடர் விடுதியில், கலெக்டர் லில்லி நேற்று திடீர் தணிக்கை செய்தார். அப்போது, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு அளிக்கப்படாததும், சுக்குமல்லி காபி மற்றும் இறைச்சி ஆகியவை சரியாக வழங்கப்படாததும், பணிக்கு சரியாக வரததும் தெரியவந்தது. இதையடுத்து, விடுதி காப்பாளர் பழனிவேலை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.