மேலும் செய்திகள்
ரூ.85 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் ஆய்வு
15-Sep-2024
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மெணசி, பையர்நத்தம், பி.பள்-ளிப்பட்டி ஊராட்சிகளில், மொரப்பூர் கோட்ட உதவி செயற்பொ-றியாளர் பாலகிருஷ்ணன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய உதவி பொறியாளர் திலீபன் ஆகியோர், வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.இதில் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில், 2.20 கி.மீ., தொலைவு, 1.12 கோடி ரூபாய் மதிப்பில் மெணசி --கதிரிபுரம் தார்ச்சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் குளம் வெட்டும் பணி, கனவு இல்லம் கட்டும் பணி, பி.பள்ளிப்பட்டியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது தரமாகவும், விரைவாகவும் சாலைகள் போடவும், கட்-டடங்கள் கட்டவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
15-Sep-2024