தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்
'தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்அரூர், அக். 3-அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், மகாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று ராமர், கவுரி உள்ளிட்ட, ஐந்து தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். அமாவாசை பூஜையில் சுவாமியை வழிபட்டனர். அதே போல், இருமத்துார் தென்பெண்ணையாற்றில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.