உள்ளூர் செய்திகள்

பிரச்சார இயக்கம்

தர்மபுரி: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைகள் மற்றும் மக்கள் பிரச்னைக்கான பிரச்சார இயக்கம் மற்றும் தர்ணா நடக்கிறது. இன்று (செப்.,27) மாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் பென்னாகரம் தாசில்தார் அலுவலகம் முன்பும், நாளை மாலை 4.30 மணிக்கு அரூர் தாசில்தார் அலுவலகம் முன் நடக்கும் தர்ணாவில் மாவட்ட மற்றும் தோழமை சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்று கோரிக்கை குறித்து விளக்குகின்றனர். ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராகவும், விலை வாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம், தனியார் மயம், தாராளமயம், விவசாயிகளுக்கு இடு பொருட்கள் விலை உயர்வு, அரசு காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து தர்ணாவில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ