மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
21 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
21 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களில் விநாயகர் சிலை அமைக்க ஹிந்து அமைப்புகள் சார்பில் போலீஸ் அனுமதி கேட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலை வைப்பது அவற்றை நீர்நிலையில் கரைப்பது மற்றும் ஊர்வலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விழா குழுவினருடன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து டி.எஸ்.பி., சந்தனபாண்டியன் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன்னதாக வீதிகளில் வழிபாட்டுக்காக சிலை வைக்கும் விழா குழுவினர் இருவர் இரவு மற்றும் பகல் நேரத்தில் சிலைக்கு காவல் இருக்க வேண்டும். சிலை அமைந்துள்ள இடத்தில் கூடாரம் தென்னங்கீற்றால் மூடக்கூடாது. சிலைகள் ராசயன கலவை கொண்டாதாக இருக்க கூடாது.
சிலை வைத்து ஐந்து நாட்களுக்குள் எடுத்து விட வேண்டும். நீர்நிலையில் கரைப்பதற்காக சிலை எடுத்து செல்லும் வாகனத்தில் ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது யாரும் மது அருந்த கூடாது. மசூதி மற்றும் தேவாலயங்கள் அருகே சிலை எடுத்து செல்லும் போது பட்டாசு மற்றும் கோஷங்கள் எழுப்ப கூடாது. ஊர்வலத்தை கண்காணிக்க செக்போஸ்ட்டில் போலீஸார் நிறுத்தப்படுவர். தர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களிலும், அதியமான்கோட்டையில் 52 இடங்கள், மதிகோன்பாளையத்தில் 38, தொப்பூரில் 50, கிருஷ்ணாபுரத்தில் 37 மற்றும் காரிமங்கலத்தில் 28 இடங்களில் சிலை அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. சிலைகளை மாலை 6 மணிக்குள் நீர்நிலைகளில் கரைத்துவிட வேண்டும். விதிமுறைகளை அனைத்து விழாகுழுவினரும் மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இன்ஸ்பெக்டர்கள் சம்பத்குமார் (மதிகோன்பாளையம்), ஜெகநாதன் (காரிமங்கலம்), அசோக்குமார் (அதியமான்கோட்டை), கபிலன் (தொப்பூர்) உட்பட பலர் கலந்துகொண்டனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025