மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
9 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
9 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, நிலம் சர்வே செய்ய, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயரை, போலீஸார் கைது செய்தனர்.சேலத்தை சேர்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமான நிலம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, இருளப்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை சர்வே செய்ய கோரி, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் கோபால் மனு செய்தார்.நிலத்தை அளந்து கொடுக்க ,சர்வேயர் தங்கவேல் (55), 2,000 ரூபாய் கேட்டார். அதிர்ச்சி அடைந்த கோபால், தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு ÷பாலீஸில் புகார் செய்தார். போலீஸார் ஆலோசனைப்படி கோபால், பணம் கொடுப்பதாகக் கூறி, நிலத்தை அளக்க வருமாறு சர்வேயரை அழைத்தார்.நேற்று மாலை, சர்வேயர் தங்கவேல், நிலத்தை அளந்து கொடுத்தார். பணி முடிந்ததும், கோபால், 2,000 ரூபாயை தங்கவேலுவிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.,நாச்சியப்பன் தலைமையிலான போலீஸார், தங்கவேலுவை கையும் களவுமாக கைது செய்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025