மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
36 minutes ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
36 minutes ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கிட வசதியாக கல்வி நிறுவனங்களுக்கு தனிக்குறியீட்டு எண் ஒதுக்கீடு குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (ஆக., 5) மாலை 4 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ மாணவ, மாணவிகளுக்கு அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகையானது மாணவ, மாணவிகளின் வங்கி கணக்குக்கு வழங்கும் திட்டம் கடந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கு தனி குறியீட்டு எண் ஒதுக்கீடு மற்றும் இணைய தளம் மூலம் அதன் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், கல்வி நிறுவனங்களில் முதல்வர்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் உதவியாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களுக்கு குறியீட்டு எண் ஒதுக்கீடு செய்வதிடல் தவறு நடக்கும் பட்சத்தில் அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க இயலாத நிலை ஏற்படும். இதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
36 minutes ago
36 minutes ago
03-Oct-2025
03-Oct-2025