மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
17 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
17 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
அரூர்: அரூரில் சிமென்ட் கடையில் நூதன முறையில் 30,000 ரூபாயை திருடி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அரூர் பழையபேட்டையை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (75). இவரது மருமகள் விஜயபாரதி. இவர் அதே பகுதியில் உரம் மற்றும் சிமென்ட் கடை வைத்துள்ளார். கடையை சாமிக்கண்ணு பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருந்த சாமிக்கண்ணுவிடம் இரு மர்ம நபர்கள் வந்து சிமென்ட் கேட்டனர். கடையில் உள்ளே சென்று சாமிக்கண்ணு சிமென்ட் எடுத்து வந்துள்ளார். பின்பு எடை போட்டு அவர்களிடம் சிமென்ட் கொடுக்க திரும்பி பார்த்தபோது இருவரையும் காணவில்லை. அவர்கள் மீண்டும் வருவார்கள் என நினைத்து சாமிக்கண்ணு காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. சிறிது நேரம் கழித்து சாமிக்கண்ணு கல்லாப்பெட்டியை திறந்துள்ளார். அப்போது கல்லாவில் இருந்த 30,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர் அரூர் போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., ரவிச்சந்திரன் விசாரிக்கிறார்.
17 hour(s) ago
17 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025