காரிமங்கலம்: தமிழக அரசு 100 நாள் சாதனையை பாராட்டி, அ.தி.மு.க., சார்பில்
பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும்
மகிழ்ந்தனர்.காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில்,
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு
வழங்கப்பட்டது. நகர செயலாளர் காந்தி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர்
செந்தில்குமார், பஞ்சாயத்து தலைவர்கள் காவேரி, லட்சுமி மாது, ராஜா, ஒன்றிய
கவுன்சிலர் செல்விராஜா, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ரவிசங்கர்,
சிறுபான்மையினர் பிரிவு அபிப் முஹமது, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள்
ராமச்சந்திரன், செல்வி, சின்னராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். *
காரிமங்கலம் யூனியன் ஜக்கசமுத்திரம் பஞ்சாயத்தில், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற
செயலாளர் கங்காதரன் தலைமை வகித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அவைத்தலைவர் துரைராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் வசந்தா கங்காதரன், பிரேமா
யுவராஜ், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தன், கணேசன், பஞ்சாயத்து செயலாளர்கள்
முருகன், நாகராஜ், ரவி, அன்பு, மாது, முருகேசன், மாதையன், சங்கர், மாது
உட்பட பலர் கலந்து கொண்டனர். * பாலக்கோட்டில் நடந்த விழாவில், நகர செயலாளர்
சங்கர் தலைமையில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு
இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். * தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே முன்னாள் நகர
துணை செயலாளர் கவுன்சிலர் ரவி தலைமையில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஜெயலலிதா பேரவை செயலாளர் பெருமாள் ,
மீனவர் அணி செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். *
காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் பன்னீர் செல்வம்
தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு
இனிப்பு வழங்கினர். நகர செயலாளர் வாசுதேவன், ஒன்றிய துணை செயலாளர்
சுந்தரேஷன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் எர்ரள்ளி ஆறுமுகம்,
அவைத்தலைவர் ஜெகதீசன், இளைஞர் அணி குப்புசாமி, முன்னாள் சேர்மன் பெரியவேடி,
பாசறை செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.