தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்தர்மபுரி,: தர்மபுரி கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதில், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன், 1,000 ரூபாய் ரெக்க தொகை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். நகர செயலாளர் சுரேஷ், மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக, 20 பெண்கள் உட்பட மொத்தம், 85 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.