உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: மத்திய அரசை கண்டித்தும், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பா.ஜ., அரசுக்கு துணை போகும், அ.தி.மு.க.,வை கண்டித்தும், தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், 6 இடத்திலும், மேற்கு மாவட்டத்தில், 5 இடத்திலும் என மொத்தம், 11 இடங்களில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி தலைமை வகித்தார். தர்மபுரி பாரதிபுரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள், தி.மு.க., மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். தர்மபுரி மேற்கு மாவட்டம் கடத்துாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார்.பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பென்னாகரம் முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன் தலைமை வகித்தார். இதேபோல், தர்மபுரி மாவட்டத்தில், 11 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது. இதில், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி