மேலும் செய்திகள்
3 ஒன்றியங்களாக பிரிப்பு உடன் பிறப்புகள் 'குஷி'
21-May-2025
Playoffல் காலுன்றியது பஞ்சாப்
18-May-2025
Match ஒன்று Qualifiers மூன்று
19-May-2025
அரூர்: தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க.,வில், கட்சி ரீதியாக அரூர் ஒன்றியம் கிழக்கு, மேற்கு, வடக்கு என, மூன்றாக செயல்பட்டு வந்தது. முறையே, சந்திரமோகன், சவுந்தரராஜன், வேடம்மாள் ஆகியோர் ஒன்றிய பொறுப்பாளர்களாக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், அரூர் ஒன்றியம் மூன்றில் இருந்து நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரூர் தெற்கு ஒன்றியம் புதிதாக உருவாக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னரசுவை நியமனம் செய்து தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரூர் கிழக்கு ஒன்றியத்தில், 8 பஞ்., மேற்கு ஒன்றியத்தில், 7 பஞ்., வடக்கு ஒன்றியத்தில், 10 பஞ்., தெற்கு ஒன்றியத்தில், 8 பஞ்., அடங்கியுள்ளன.
21-May-2025
18-May-2025
19-May-2025