மேலும் செய்திகள்
தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
11-Nov-2024
தி.மு.க., செயற்குழு கூட்டம்காரிமங்கலம், நவ. 22-காரிமங்கலம் அடுத்த, மல்லுப்பட்டியில் மேற்கு ஒன்றிய, தி.மு.க., செயற்குழு கூட்டம், ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நடந்தது.இதில், வரும் சட்டசபை தேர்தலில், தலைமை, யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரது வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும். இப்போதிலிருந்தே நிர்வாகிகள் அனைவரும், திண்ணை பிரசாரம் மற்றும் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். மேலும், தி.மு.க., ஆட்சியில் நடந்து வரும் மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான இலவச பஸ் வசதி, மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கும், 1,000 ரூபாய் திட்டம் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய அவைத்தலைவர் முனுசாமி, விவசாய அணி துணைத் தலைவர் குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
11-Nov-2024