தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி தர்மபுரியில் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி, தி.மு.க., கட்சி அலுவலகத்தில், தர்மபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.தர்மபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதம் தலைமை வகித்தார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் வரவேற்றார். தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி பேசினார். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பா-ளர்கள் ஈஸ்வர், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தர்மபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் யாஸ்மின் நன்றி கூறினார்.