மேலும் செய்திகள்
471 நாட்கள் சிறைவாசம் முடித்தார் செந்தில் பாலாஜி
27-Sep-2024
அரூர்: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீது, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து, நீதிபதிகள், உத்தரவிட்டனர்.இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், நிர்வாகிகள் தமிழழகன், முகமது அலி, கோட்டீஸ்வரன், விமல், திருவேங்கடம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Sep-2024