உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாபு,32; கூலித்தொழிலாளி. இவர், 11 வயது சிறுமியை கடந்த, 2024-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமானார். தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு, தர்ம-புரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாபுவிற்கு, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும், 70,000 ரூபாய் அபராதம் விதித்து, போக்சோ நீதிமன்ற நீதிபதி அசின்-பானு, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை