மாணவ,மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை
சேலம்: சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா, ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. கல்லுாரி தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத் விழாவை தொடங்கி வைத்தார்.இதில் பங்கேற்ற, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி பாஸ்-கரன் பேசுகையில், 'தேர்வில் மாணவர்கள் சாதனை படைக்க, அவரது பெற்றோர் தான் முதல் காரணம். அவர்களுக்கு அடுத்து, அறிவூட்டும் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். அவர்களை மறக்-காமல் போற்ற வேண்டும்,' என்றார். அதன்பின், 10, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர் 50 பேருக்கு தலா. 1,000 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கினார். இந்திய உணவு பாதுகாப்பு கழக ஆலோசனைக்குழு உறுப்பினர், சென்னை சிஏஜி நிர்வாக இயக்குனர் சரோஜா நுகர்வோர் பாது-காப்பு குறித்து பேசினார்.