மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வில் 60 பேர் ஐக்கியம்
22-Oct-2025
அரூர், அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) அழகுமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், அரூர் கோட்டம், தெற்கு அரூர் உபகோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், இதுவரை, எல்லப்புடையாம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கெளாப்பாறையில் இயங்கி வந்தது. தற்சமயம் மக்களின் நிர்வாக நலன் கருதி, கீரைப்பட்டி பஞ்., வள்ளிமதுரையில் உள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.ஆகையால், அரூர் கிழக்கு பிரிவிற்கு உட்பட்ட மின் பகிர்மானங்களாகிய கீரைப்பட்டி, கெளாப்பாறை, எம்.தாதம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, வேப்பம்பட்டி, கோபால்பட்டி, பொன்னேரி போன்ற பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் மின்சாரம் சம்மந்தமான அனைத்து விபரங்களையும், இந்த வளாகத்தில் உள்ள உதவி பொறியாளரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.மேலும், மேற்கண்ட பகுதிகளிலிருந்து மின்நுகர்வோர் தங்களது மின் கட்டணங்களை சிரமமின்றி செலுத்த, அருகில் இயங்கி வரும் வெவ்வேறு பிரிவு வசூல் மையங்களிலும், இணையதளம் வாயிலாக செலுத்தும் நடைமுறையை பயன்படுத்தலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
22-Oct-2025