உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

தர்மபுரி, தர்மபுரி அருகே, புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்கும் வகையில், 'தாய் மொழியுடன், தமிழ்மொழி கற்போம்' திட்டத்தில் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.தர்மபுரி ஒன்றியம், குப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட பலாமரத்து கொட்டாயில் உள்ள, செங்கல் சூளைகளில் வேலை செய்யும், வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களின், 18 குழந்தைகளை, பலாமரத்து கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், மாணவர்களின் தாய்மொழியான ஹிந்தியுடன் தமிழ் மொழியை கற்பிக்கும் வகையில், 'தமிழ் மொழி கற்போம் திட்டத்தில்' சிறப்பு பயிற்சி மையத்தை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குனர் (பொ) சுகன்யா நேற்று தொடங்கி வைத்தார்.இதில், தர்மபுரி சி.இ.ஓ., ஜோதிசந்திரா மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல், வட்டார கல்வி அலுவலர்கள் நாசர், தங்கவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முல்லை வேந்தன், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ