மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனை
26-Aug-2025
அரூர், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., தர்மபுரி மாவட்டம், அரூருக்கு வரும், 28ல் வருகை தர உள்ளார். இதையொட்டி நேற்று அரூரில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசுகையில், ''பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பங்கேற்கும், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' நிகழ்ச்சிக்கு, அதிகளவில் மக்களை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், அரூர் நகர செயலாளர் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
26-Aug-2025