உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அடிப்படை வசதியின்றி தவித்து வரும் ஏரியூர் அரசு கல்லுாரி மாணவர்கள்

அடிப்படை வசதியின்றி தவித்து வரும் ஏரியூர் அரசு கல்லுாரி மாணவர்கள்

ஏரியூர், ஏரியூரில் கடந்த, 4 ஆண்டுகளாக அரசு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும், அரசு கலைக்கல்லுாரியில், அடிப்படை வசதிகளின்றி மாணவ, மாணவியர் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், ஏரியூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், தொடர் கோரிக்கைக்கு பின், கடந்த 2022ல் தமிழக அரசு, ஏரியூரில் அரசு கலைக்கல்லுாரியை தொடங்கியது. சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் கீழ், கல்லுாரி வகுப்புகள், 2022-23 ஆண்டு முதல், தற்காலிகமாக ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மூன்று கல்வி ஆண்டுகள் முடிந்து, நான்காம் கல்வி ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் அடிப்படை வசதிகளின்றி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அக்கல்லுாரி மாணவ, மாணவியர் தெரிவித்ததாவது;ஏரியூர் சுற்றுவட்டார பகுதி மக்களின், நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, அங்கு அரசு கலைக்கல்லுாரி தொடங்கப்பட்டது. இங்கு, 400க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வரும் நிலையில், 22 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். கல்லுாரி வகுப்புகள், பள்ளி வளாகத்தில் செயல்படுவதால், போதிய இடமின்றி, முதல் பேட்ச் மாணவர்கள், பள்ளியிலேயே தங்களுடைய கல்லுாரி படிப்பை முடித்துள்ளனர். ஆகவே, கல்லுாரி கட்டமைப்பு வசதிகளுடன் தனி இடம் ஒதுக்கி, அங்கு நிரந்தர கட்டடம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் கல்லுாரி செயல்பட, மாவட்ட நிர்வாகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை