தர்மபுரியில் காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா வெள்ளி நாணயங்கள் வழங்கல்
தர்மபுரி: 'காலைக்கதிர்' முகவர்கள் குடும்ப விழா, நேற்று தர்மபுரியில் கொண்டாடப்பட்டது. அதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட முகவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். மக்களின் மனசாட்சியாக உள்ள 'காலைக்கதிர்' நாளிதழை மக்க-ளிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் உழைப்பை சிறப்பிக்கும் வகையில், 'முகவர்கள் குடும்ப விழா - -2025' தர்மபுரியில் நடந்-தது. முதலில் வந்த முகவர்களின் இல்லத்தரசிகள், 5 பேர் குத்து-விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, 'காலைக்கதிர்' வெள்ளி நாணயத்தை, அதன் ஆசி-ரியர் ராமச்சந்திரன், பொது மேலாளர் ஜெரால்டு வெளியிட, விற்-பனை மேலாளர் செந்தில்குமார் பெற்று கொண்டார். சிறப்பு அமர்வில் 'செல்வம் சேர்க்கலாம் வாங்க,' என்ற தலைப்பில் எழுத்தாளர் செல்வேந்-திரன் பேசியதாவது: 'காலைக்கதிர்' முகவர்கள் தங்கள் குடும்ப விழாவிற்கு வருவ-துபோல் குடும்பத்தினருடன் வந்துள்ளது மகிழ்ச்சி. முகவர்கள், செய்தித்தாள் விற்பனையை தொழிலாக பார்க்கவில்லை. ஒரு தொண்டாக செய்வதால் உங்களை தியாகிகள் என அழைக்கலாம். இந்திய மக்கள் தொகையில், 2 சதவீத மக்களே நாளிதழ்களை படிப்பதாக தகவல்கள் கூறுகிறது. ஆனால் கடந்த, 6 மாதத்தில், 2.77 சதவீதம் செய்திதாள் விற்பனை அதிகரித்துள்ள-தாகவும் 'ஏபிசி' நிறுவன கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.ஸ்மார்ட் போன், சமூகவலைதளங்கள் பயன்பாடு அதிகரித்தும் செய்திதாள் விற்பனை அதிகரிக்க காரணம், சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்-திகள், அரசியல் சாயம் பூசப்பட்டும், ஒருசார்பாகவும் வருகிறது. அவற்றில் அவசர, அவசரமாக வெளியிடப்படும் தவறான செய்-திகள் உடனடியாக நீக்கப்படுகிறது. இதனால் நம்பகமான செய்தி-களை தேடி அச்சு ஊடகத்திற்கு மக்கள் வருகின்றனர். அதேபோல பெரிய நிறுவனங்களும் தங்கள் விளம்பரங்களை நாளிதழுக்கு வழங்கி வருகின்றனர். வரும், 2026 சட்டசபை தேர்தல் நெருங்க-வுள்ள நிலையில் நாளிதழ்கள் விற்பனை மேலும், 8 சதவீதம் அதி-கரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.குடும்ப விழாவிற்கு வந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து முகவர்களுக்கும் 'காலைக்கதிர்' வெள்ளி நாணயம், புத்தாடை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முகவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து உடனடியாக அச்சிட்டு பெற்று சென்றனர்.