பாம்பு கடித்த விவசாயி சாவு
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி அடுத்த நத்தமேடுவை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 53. விவசாயி. கடந்த, 1ல், தன் தோட்டத்தில் மாட்டுக்கு தீவன தட்டு அறுக்கும் போது, அவரை பாம்பு கடித்துள்ளது. இது தெரியாமல் இருந்த கோவிந்தசாமி கடந்த, 5ல் வலி எடுக்கவே, குடும்பத்தினர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.