உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

அதியமான்கோட்டை, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, சேசம்பட்டியை சேர்ந்த விவசாயி குணசேகரன், 49. இவர் நேற்று மாலை, 6:00 மணிக்கு அவரது விவசாய நிலத்தில் இருந்து, எருமையை பிடித்து வந்தார். அப்போது, அங்கு மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது தெரியாமல் மிதித்ததில், எருமை சம்பவ இடத்தில் பலியானது.மயங்கிய நிலையில் இருந்த குணசேகரனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மின்சாரம் தாக்கி, விவசாயி இறந்தது குறித்து, போலீசார், வருவாய்த்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை