உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வேன் மோதி விவசாயி பலி

வேன் மோதி விவசாயி பலி

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் வடிவேல்,38. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 1:45 மணிக்கு விவசாய தோட்டத்தில் இருந்து பணி முடிந்து பாப்பம்பாடியில் உள்ள வீட்டுக்கு செல்ல எச்.புதுப்பட்டி - பாப்பம்பாடி ரோட்டில் தன் டி.வி.எஸ்., எக்ஸ் எல்.டூட்டி மொபட்டில் வடிவேல் சென்றார்.வேடியப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே, அதிவேகமாக வந்த டாடா ஏசி வேன் வடிவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். புகார் படி ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை