உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்க விவசாயிகள் கோரிக்கை

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்க விவசாயிகள் கோரிக்கை

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில்கரும்பு அரவை துவங்க விவசாயிகள் கோரிக்கைஅரூர், நவ. 1- கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவையை துவங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, விவசாயிகள் நடவு செய்துள்ள கரும்பை, அரவைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவையை விரைந்து துவங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு, போதிய மழை இல்லாததால், கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததுடன், வறட்சியால் பல நுாறு ஏக்கரில் கரும்புகள் காய்ந்து போனது. மேலும், வேர்ப்புழு தாக்குதலாலும் கரும்பு காய்ந்துள்ளன. கடந்த காலங்களில், ஆலையில் கரும்பு அரவை தாமதமாக துவங்கப்பட்டதால், 14 மாதங்கள் ஆன கரும்புகள் கூட, வெட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கரும்பு சாறு குறைந்ததுடன், விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மேலும், தொழிலாளர்களின் பற்றாக்குறையால், கரும்பு வெட்ட முடியாமல், விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்தாண்டு, கரும்பு டன் ஒன்றுக்கு வெட்டுக்கூலியாக, 1,600 ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் கரும்புகள் வயலில் சாய்ந்துள்ளன. இவற்றை, எலிகள் கடித்து சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, நவம்பர் மாதத்திற்குள் ஆலையில், கரும்பு அரவையை துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை