உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாயிகள் உண்ணாவிரதம்

விவசாயிகள் உண்ணாவிரதம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் மரவள்ளி கிழங்கு மற்றும் மக்காச்சோள அரவை ஆலை செயல்பட்டு வருகின்றது. சுற்றுப்புறத்தில் மாசு ஏற்படுத்திவரும் ஆலையை கண்டித்தும், ஆலை மீது நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களை கண்டித்தும், பீணியாறு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சார்பில், நேற்று தனியார் ஆலைக்கு முன், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பீணியாறு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜேஷ், வெங்கடேசன், சுரேஷ், ராஜமாணிக்கம், சுந்தர வடிவேல், ராஜகுமாரன் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிர்வாகி சதீஷ்குமார், விவசாய சங்கம் வஞ்சி உள்ளிட்ட, 100க்கு மேற்பட்டோர் பேசினர். அப்போது, 30 ஆண்டுகளுக்கு மேலாக சுத்திகரிக்காத ரசாயன கழிவு நீரை ஆற்றில் விடுவதால், நிலத்தடி நீர், குடிநீர், விவசாயம், கால்நடைகள், பொதுசுகாதாரம் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறைகளிடம் பல முறை மனுக்கள் அளித்தும் பலனில்லை. பீணி ஆற்றங்கரையை ஆக்கிரமித்து, அனுமதியின்றி ஆலை வளாகத்தில், 5 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள, 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூட வேண்டும். சுத்திகரிக்காத ரசாயன கழிவு நீரை ஆற்றில் வெளியேற்றி வரும் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனே அரசு எடுக்க, வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை