மேலும் செய்திகள்
மரவள்ளி கிழங்கில் சூப்பரான வடை
16-Aug-2025
அரூர், அரூர் பகுதியில், வயல்களில் உள்ள சொட்டு நீர் ஓஸ்கள் திருடப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூரை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம், மஞ்சள், மரவள்ளிகிழங்கு, கத்திரி, தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் செல்லம்பட்டி, கீழானுார் பகுதியில் மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டங்களில் உள்ள சொட்டு நீர் ஓஸ்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக புகார் தெரிவித்துள்ள விவசாயிகள், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மூன்று விவசாயிகளின் தோட்டங்களில் திருட்டு நடந்துள்ளதாகவும், இதனை தடுக்க, அரூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-Aug-2025