தீ தடுப்பு ஒத்திகை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதநத்தம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் உதவி பணியாளர்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் (பொ) பிரகாசம் தலைமை வகித்தார். இதில், தீயணைப்பு துறையினர், தென்மேற்கு பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் தங்களையும், பிறரையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது என விளக்கினர். மேலும், வெப்ப அலைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், அங்கன்வாடி மையங்களில் திடீரென ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர்.