உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உணவு பாதுகாப்பு துறையினர் தேன் விற்பனை குறித்து ஆய்வு

உணவு பாதுகாப்பு துறையினர் தேன் விற்பனை குறித்து ஆய்வு

தர்மபுரி :தர்மபுரி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த தர்மபுரி உழவர் சந்தையில், நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் இணைந்து, நேற்று தர்மபுரி உழவர் சந்தையில் ஆய்வு செய்தனர்.இதில், காய்கறிகள், கீரைகள், பழங்கள், மற்றும் சிறுதானிய சத்து மாவு, தேன், சமையல் எண்ணெய் ஆகியவற்றில் ரசாயனம் ஏதேனும் தெளிக்கப்பட்டுள்ளதா அல்லது சேர்க்கப்பட்டுள்ளதா என, ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விற்பனைக்கு கொண்டு வந்த தேன் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை