உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, பெரியாம்பட்டியல், தனியார் கல்வி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதில், இலவச கல்வி கொள்கையை மையமாக கொண்டு, கடந்த ஏப்., மே மாதம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த, மாணவர்களுக்கு உயர்கல்விக்கு தேவையான, கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்-தப்பட்டது. இதில், 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று, அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்-தது. இதில், அறக்கட்டளை நிர்வாகிகள், தொழிலதிபர்கள், போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை