மேலும் செய்திகள்
சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்
05-Sep-2025
பாப்பிரெட்டிப்பட்டி :கடத்துாரில் கிங்ஸ் அரிமா சங்கம் மற்றும் தர்மபுரி சுபா மருத்தவமணை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. அரிமா சங்க தலைவர் நரேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாக செயலாளர் அறிவழகன் வரவேற்றார். டாக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையில் டாக்டர் சவுமியா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் ரத்த பரிசோதனை, ரத்த கொதிப்பு, இதய பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. கடத்துார் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை, ஆலோசனை பெற்றனர்.
05-Sep-2025