சிறுமி, 2 பெண்கள் மாயம்
பாலக்கோடு :திருப்பூரை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் மனைவி சசிகலா, 29. தம்பதியருக்கு மகன், மகள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த, 10 நாட்களுக்கு முன் தன் குழந்தைகளுடன், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள அண்ணன் மணிகண்டன் வீட்டிற்கு சசிகலா வந்துள்ளார். கடந்த, 27ல் மதியம், 3:00 மணிக்கு சசிகலா தன், 9 வயது மகளுடன் வீட்டிலிருந்து மாயமாகினார். புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா மூங்கில்மடுவை சேர்ந்தவர் வினோதினி, 19; இவர், சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடந்த, 27ல் மாலை, 4:00 மணிக்கு ஜெராக்ஸ் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.