நல்ல விவசாய நடைமுறை பண்ணை பள்ளி பயிற்சி
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பறையபட்டியில், வேளாண் துறை அட்மா திட்டத்தில், நல்ல விவசாய நடைமுறைகள் குறித்த பண்ணை பள்ளி நடந்தது. அரூர் வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்து பேசுகையில், 'நெல் நடவு செய்யும் விவசாயிகள் வரிசை முறையில் நடவு செய்து, அதிக மகசூல் பெறலாம். உளுந்து மற்றும் பச்சை பயிறு போன்ற பயறு வகை பயிர்களை வரப்பு பயிராக நெல் வயல்களில் பயிர் செய்ய வேண்டும். இதனால், வயல்களில் உள்ள பயிர்களில் பூச்சி தாக்குதல் குறைந்த அளவில் இருக்கும்' என்றார். மேலும், அவர், வேளாண் துறையில் உள்ள மத்திய மற்றும் மாநில திட்டங்கள் குறித்தும், அதிக மகசூல் எடுப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கினார்.தகடூர் நெல் களஞ்சியம், அரூர் முன்னோடி விவசாயி சந்தோஷ், இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தால், அதனால் விளைவிக்கப்படுகின்ற விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு கூடுதல் லாபம் கிடைப்பதாக கூறினார். இதில், வட்டார தொழில் மேலாளர் செந்தில்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ் குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.