உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 4 வழித்தடங்களில் அரசு பஸ் சேவை நீட்டிப்பு

4 வழித்தடங்களில் அரசு பஸ் சேவை நீட்டிப்பு

தர்மபுரி, தமிழக அரசு போக்குவரத்து கழகம் (சேலம்), தர்மபுரி மண்டலத்திற்குட்பட்ட தர்மபுரி மாவட்டத்தில், 6 புதிய வழித்தடங்கள் மற்றும் 108 வழித்தட நீட்டிப்பு, வழித்தட மாற்றம் என மொத்தம், 114 வழித்தடங்களில், 127 பஸ்கள் மூலம், 295 கிராம, நகரங்களில் இருந்து பள்ளி, கல்லுரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என, 2,78,157 பேர் பஸ் வசதி பெற்று பயனடைந்து வருகின்றனர்.மேலும் பழைய புறநகர் பஸ்களுக்கு மாற்றாக, 31 புதிய பஸ்கள், 45 புனரமைப்பு பஸ்கள் என, 76 பஸ்கள், மகளிர் விடியல் பயணம் செய்யும் பழைய டவுன் பஸ்களுக்கு மாற்றாக, 23 புதிய பஸ்கள், 15 புனரமைப்பு பஸ்கள் என, 38 பஸ்கள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் சதீஸ் முன்னிலையில், 4 வழித்தடங்களில் தடம் நீட்டிப்பு, மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பயணம் செய்யும் பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார். இதன் மூலம், 7 கிராமங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என, 4,311 பேர் பஸ் வசதி பெறவுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தர்மபுரி தி.மு.க.,- -எம்.பி., மணி, நகராட்சி தலைவர் லட்சுமி, தர்மபுரி மண்டல பொது மேலாளர் செல்வம், தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் தடங்கம் சுப்பரமணி, நகர செயலர் நாட்டான் மாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை