உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேர்தல் வாக்குறுதி-களை நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை கண்டித்து, வட்ட கிளைத் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், வட்ட கிளை செய-லாளர் மாணிக்கம், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட துணைத் தலைவர் சதிஷ் பேசினார்.தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிக-ளான, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய-மற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்-கப்பட்ட சரண்டர் தொகையை உடனே வழங்க வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்-டனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மஞ்சுளா உள்பட பலர் பங்கேற்றனர். கடத்துார் பேரூராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ண-மூர்த்தி தலைமையில் நடந்தது.மாவட்ட பொருளாளர் அன்பழகன், வட்டார தலைவர் பெருமாள், செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்-டனர். இதே போல், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை