சரக அளவில் வாலிபால் போட்டி அரசு பள்ளி மாணவியர் முதலிடம்
சரக அளவில் வாலிபால் போட்டிஅரசு பள்ளி மாணவியர் முதலிடம்பாப்பிரெட்டிப்பட்டி, அக். 11---பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடந்த வாலிபால் போட்டியில் சீனியர், ஜூனியர் பிரிவில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன.இதில், மோளையானுார் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவியர் ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். தகுதி பெற்ற மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் குமரன், கோட்டி ஆகியோரையும், தலைமை ஆசிரியர் அசோக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னழகு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.