உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக கபடி போட்டியில் அரசு பள்ளி முதலிடம்

சரக கபடி போட்டியில் அரசு பள்ளி முதலிடம்

தர்மபுரி, தர்மபுரி அருகே, மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், நேற்று கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, தர்மபுரி சரக அளவிலான, 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். இதையடுத்து மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவ, மாணவியரை, தலைமையாசிரியர் சின்னசித்தன், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் பவித்ரா மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி