சமூக நீதி பேசினாலும் தொடரும் சமூக பாகுபாடு ஓசூர் விழாவில் கவர்னர் ரவி வேதனை
ஓசூர்: ''சமூகநீதி பற்றி, 60 ஆண்டு களுக்கு மேலாக பேசுகின்றனர். ஆனால், சமூக பாகுபாடு தொடர்ந்து நடந்து வருகிறது,'' என்று, தமிழக கவர்னர் ரவி வேதனை தெரிவித்தார்.வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை ஐந்தாமாண்டு விழா, வள்-ளலாரின், 202வது பிறந்தநாள் விழா, ஜீவகாருண்ய விருது வழங்கும் விழா, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று நடந்-தது. வள்ளலார் விவேகம் அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விழாவை துவக்கி வைத்த தமிழக கவர்னர் ரவி, சமூக பணியாற்றியவர் களுக்கு ஜீவ காருண்ய விருதுகளை வழங்கி பேசியதாவது:தமிழகம் வருவதற்கு முன்பே வள்ளலார் கொள்கைகளால் ஈர்க்-கப்பட்டேன். நம் நாடு மிக கடினமான நிலையில் இருக்கும் போது, வள்ளலார் தெய்வீக தன்மையை எடுத்தார். பாரத நாட்டில் எப்போதெல்லாம் அதர்மம் தலை துாக்குகிறதோ, அப்போ-தெல்லாம் வள்ளலார் போன்ற ஞானிகள் நம்மை காக்கின்றனர். தாய்மொழியில் சிந்திக்கும் போதுதான் நம்மால் சிறப்பாக சிந்திக்க முடியும். அதனால்தான் வள்ளலார் சமஸ்கி-ருதம், தமிழில் சொல்லி கொடுத்தார். பாரத தேசத்தை ஆண்ட-வர்கள், மேல் சாதி, கீழ் சாதி என தீண்டாமையை புகுத்தினர். அப்போது வள்ளலார் தீண்டாமையை ஒழிக்க கூறினார். கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக, சமூகநீதி பற்றி பேசுகின்றனர். ஆனால், சமூக பாகுபாடு தொடர்ந்து நடந்து வருகிறது. தலித் சகோதர, சகோதரிகளை ஏற்றத்தாழ்வுகளுடன் பார்க்கிறோம். அவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. சாதி தொடர்-பான வன்முறை தொடர்கிறது. சமூக நீதியை பற்றி அதிகமாக பேசுப-வர்கள், வள்ளலாரை பின்தொடர்ந்திருந்தால் இந்நிலை மாறியி-ருக்கும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.விழாவில் கோவை மகாதேவ் மகா சமஸ்தானம் மகா ஸ்ரீஸ்ரீயுக்-தேஷ்வர் சுவாமிகள், மயிலாடுதுறை சிவராமபுரம் ஸ்ரீஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தின் ஸ்ரீமத் வாயுசித்த ராமானுஜ ஜீயர், பத்-திரகாசி ஆஸ்ரம சங்கர சாக்தாநந்த சரஸ்வதி சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.