உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, தமாணிகோம்பை அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, தலைமை ஆசிரியை தமிழ்மணி தலைமையில் நடந்தது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வேடியப்பன், புரவலர்கள் அனந்த பத்மநாபன், பள்ளி மேலாண்மை குழு தலைவி காயத்ரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை கண்மணி வரவேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெகநாதன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், புரவலர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பேசினார். மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்கள் பவித்ரா, மாலதி, பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ஷர்மிளாபானு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை