தர்மபுரி அரசு பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
தர்மபுரி: ''பொறியியல் மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு துறையில் தங்கள் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும்,'' என, சையண்ட் பெங்களூரு நிறுவனத்தின் உலகளாவிய தானியங்கி துறைத்த-லைவர் லட்சுமி நாராயணன் பேசினார்.தர்மபுரி,- செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லுாரியில் பட்டம-ளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், 2020-2023 மற்றும் 2024 ஆண்டுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த, 693 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் சுமதி தலைமை வகித்தார். சையண்ட் பெங்களூரு நிறுவனத்தின் உலகளாவிய தானியங்கி துறைத்தலைவர் லட்சுமி நாராயணன், மாணவர்களுக்கு பட்டங்-களை வழங்கி பேசுகையில், ''மாணவர்கள் செயற்கை நுண்ண-றிவு துறையில், தங்களது அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும்.தொடர்ந்து உயர்கல்வியை கற்க வேண்டும். தங்கள் வாழ்வில் சிறக்க தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் போராட வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த பொறியியல் பட்டதாரிகளாக உருவாக வேண்டும்,'' என்றார்.அமைப்பியல் துறைத்தலைவர் முருகன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத்தலைவர் கல்பனா, மின்னணுவியல் துறைத் தலைவர் அமினா, இயந்திர-வியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி, அறிவியல் மற்றும் மானு-டவியல் துறைத்தலைவர்கள் செந்தில்குமார், சுகந்தி, அமலன், கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.