துாய்மை பணியாளர்களுக்கு கிராம சேவை செம்மல் விருது
நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர், துாய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ் பங்கேற்று, துாய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு அரசு துாய்மை பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்து, நிறைய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், 1,722 நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். துாய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, அடையாள அட்டை மற்றும் விபத்து காப்பீட்டு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.இவ்வாறு தெரிவித்தார்.தர்மபுரி பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், தர்மபுரி ஊராட்சிகள் உதவி இயக்குனர் விமல் ரவிக்குமார் மற்றும் தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர், துாய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.