மேலும் செய்திகள்
மஞ்சப்பை திட்டம் மீண்டும் புத்துணர்வு பெறுமா?
13-Jul-2025
தர்மபுரி நல்லம்பள்ளி வாரச்சந்தையில், ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள் சார்பில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமை வகித்தார். ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, ஆசிரியர்கள் குமரவேல், மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.இதில், பசுமை படை மாணவர்கள், அங்குள்ளவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தின் கவர்களால் ஏற்படும் தீமை குறித்தும், 'மஞ்சப்பை' பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினர். அனைவரும், 'மஞ்சப்பை' உபயோகப்படுத்த வேண்டும் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், வாரச்சந்தைக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு 'மஞ்சப்பை' வழங்கினர்.
13-Jul-2025