உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்க தர்மபுரி 4 ரோட்டில் கிரீன் பந்தல் அமைப்பு

வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்க தர்மபுரி 4 ரோட்டில் கிரீன் பந்தல் அமைப்பு

தர்மபுரி:வாகன ஓட்டிகளை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, நான்கு ரோடு சிக்னலில், கூரையாக கிரீன் பந்தல் அமைக்கும் பணி, தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் நடந்து வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதங்களாக வெயில் வாட்டி வருகிறது. கடந்த வாரங்களில், ஒரு சில நாட்கள் மட்டும் மிதமான மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தண்ணீர், பழங்கள், பழச்சாறு, நிழல் உள்ள இடங்கள் ஆகியவற்றின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி டவுன் நான்கு ரோடு பகுதியிலுள்ள, சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழலில், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் நலன் கருதி, தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், நான்கு ரோடு சிக்னலில் உள்ள, 4 பக்கங்களிலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க, கூரையாக கிரீன் பந்தல் அமைத்து வருகின்றனர். இது, வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி