உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எச்.ஈச்சம்பாடியில் அரசு பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

எச்.ஈச்சம்பாடியில் அரசு பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

அரூர்: அரூர் - திருப்பத்துார் சாலையில், எச்.ஈச்சம்பாடி உள்ளது. இதைச் சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் தினமும் எச்.ஈச்சம்பாடியில் இருந்து சேலம், அரூர், திருப்பத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சேலத்தில் இருந்து திருப்பத்துார் செல்லும் அரசு பஸ்கள், ஈச்சம்பாடியில் நின்று செல்வதில்லை. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, ஈச்சம்பா-டியில் அரசு பஸ்கள் நின்று செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ