மேலும் செய்திகள்
சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
01-Dec-2024
அரூரில் கொட்டி தீர்த்த கனமழைநீரோடைகளில் வெள்ளப் பெருக்குஅரூர், டிச. 2-'பெஞ்சல்' புயலால், தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல், சாரல்மழை பெய்த நிலையில், மாலை, 4:00 மணி முதல், கனமழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை, கோட்டப்பட்டி கல்லாறு, சிட்லிங், நரிப்பள்ளி பகுதியில் உள்ள தடுப்பணைகள் மற்றும் காட்டாறுகள், எருமியாம்பட்டி பீணியாறு, வாச்சாத்தி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்ததுடன், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சித்தேரி மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 112 மி.மீ., மழை பதிவாகியது. தாழ்வான பகுதியில் உள்ள நெல், மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.கனமழையால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். இதனால், அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
01-Dec-2024