உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பிரெட்டிப்பட்டியில் கொட்டிய கனமழை

பாப்பிரெட்டிப்பட்டியில் கொட்டிய கனமழை

தர்மபுரி:தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று மாலை மிதமான மழை பெய்தது. மாலை, 5:20 மணி முதல் அரை மணி நேரம் தர்மபுரி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. * அரூரில், நேற்று மாலை, 6:00 மணிக்கு அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், பரவலாக விட்டு விட்டு சூறைக்காற்றுடன் சாரல்மழை பெய்தது.*பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. கனமழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. நேற்று பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை